சனி, 29 நவம்பர், 2014

தாலாட்டு....

தாலாட்டு...

ஆராரோ ஆறிறறோ.....
ஆரிரரோ ஆராரோ....

யாறடிச்சி நீ அழற
கண்ணே நீ சொல்லியழு...

யாறடிச்சு நீ கறைய
உன் மீன் விழியின் மை கறைய.......

அத்தை அடிச்சாலோ
அரளிப்பூ செண்டால.....

சித்தி அடிச்சாலோ
சென்பகப்பூ செண்டல...

மாமன் அடிச்சானோ
மல்லிகப்பூ செண்டால....

தாத்தா அடிச்சாரோ
தாமரப்பூ செண்டால...

பாட்டி அடிச்சாலோ
பால் மனக்கும் கையால....

யாரடிச்சி நீ அழற
கண்ணே நீ சொல்லியழு....


கண்ணே உன் கண்ணீரு
ஆரா பெருகுதடி.....

கண்ணே நீ கறையும் போது
வலிக்குதடி என் மனசு.....

ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ சொல்லியழு.......

ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுரங்கு.......

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ......

2 கருத்துகள்: