"சங்க காலம் சூட மறந்த இந்த காலசெஞ்சூட்டு ஒளியாளிவள்...."
கண்ணம் முழுக்க கதகதப்பிலும்....
கண்களில் குவிந்த வர்ண காதல் ரேகையும்
ஆசைகளில் புதைந்து போன நளினத்தின்
வாலிப்பு குறையாத வளைவு சித்திரமாய்....
மேனி அழகை மிகுந்து காட்டும்
கழுத்தாய் பூத்த சங்கு மலரும் ....
"கடித்து இழுக்க,மதுரம் தெறிக்கும்
சிலிர்ப்பூட்டும் செவ்விதழும்"
"ஈரம் படிந்த இதழ்களிலே
ஒத்தியெடுக்க மிகுந்த முத்தங்களும்.."
அகன்று விரிந்த மார்பின் கவர்ச்சி
மறைக்கும் உன் தாவணியும்....
உன் சுவாசத்தால் புத்துணர்ச்சி பெற்ற
உன் வாசம் மிகுந்த காற்றும்....
அப்பப்பா!!! பெண்ணிவளே, பெண்ணிவளே;
ஓ, பெண்னென்றல் தேவதையோ என்னவளே ;
இதயம் தட்டி உள்புகும் வெப்ப நெருப்பே...
உன் நினைவால் நான் என்னையே தேடி கலைக்கிறேன்...
பஞ்சு பூட்டிய மேனியினால் நெஞ்சு பூரித்தவளே வா.......
வாசல் திறக்காத வழிக்குள் புகுந்து
காமம் சொட்டாத காதல் தேரிழுப்போம் வா வா வா...........

கவிதைகள் அனைத்து அருமை. புகைபடம்களும் பொருத்தமாக உள்ளது.
பதிலளிநீக்குதளம் வளர வாழ்த்துகள்.
நண்பரின் கருத்திற்கு மிக்க நன்றி
பதிலளிநீக்கு